சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதை உளுந்து வழங்கக் கோரி விவசாயிகள் தர்ணா

Added : அக் 14, 2021
Share
Advertisement
வேப்பூர்-வேப்பூர் அருகே வேளாண் விரிவாக்க மையம் முன் விதை உளுந்து வழங்க கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.நல்லூர் ஒன்றிய வேளாண் விரிவாக்க மையம் சார்பில், கடந்த வாரம் விதை உளுந்து வழங்க விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, விதையை பெற தினசரி டோக்கனுடன் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளுக்கு, விதை வழங்காமல் அழைக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்று விதை

வேப்பூர்-வேப்பூர் அருகே வேளாண் விரிவாக்க மையம் முன் விதை உளுந்து வழங்க கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.நல்லூர் ஒன்றிய வேளாண் விரிவாக்க மையம் சார்பில், கடந்த வாரம் விதை உளுந்து வழங்க விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, விதையை பெற தினசரி டோக்கனுடன் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளுக்கு, விதை வழங்காமல் அழைக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்று விதை பெறுவதற்காக மீண்டும், ஏ.சித்துாரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். பகல் 11:00 மணி வரை அதிகாரிகள் யாருமின்றி அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.ஆத்திரமடைந்த விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, விவசாயிகளிடம் சமரசம் செய்ததை தொடர்ந்து, பகல் 11:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X