பொது செய்தி

தமிழ்நாடு

பூஜைக்கேத்த பூவிது... விலையோ ஜிவ்வுனு ஏறுது!

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி, பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்திருந்தது.இன்று சரஸ்வதி, ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது தொடர்ந்து விஜயதசமி விழாவும் நடைபெற உள்ளது. நவராத்திரி வாரத்தின் இறுதி நாட்களான தற்போது விழா களைகட்டியுள்ளதால். பூமார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்திருந்தது.செவ்வந்தி பூக்கள் கோவையின்
 பூஜைக்கேத்த பூவிது... விலையோ ஜிவ்வுனு ஏறுது!

கோவை : சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி, பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்திருந்தது.இன்று சரஸ்வதி, ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது தொடர்ந்து விஜயதசமி விழாவும் நடைபெற உள்ளது.

நவராத்திரி வாரத்தின் இறுதி நாட்களான தற்போது விழா களைகட்டியுள்ளதால். பூமார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்திருந்தது.செவ்வந்தி பூக்கள் கோவையின் சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும், சத்தியமங்கலம், பண்ணாரியிலிருந்தும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்தும் விற்பனைக்கு வந்திருந்தது.

ஐந்து கிலோ எடை கொண்ட ஒரு கூடை 2,500 ரூபாய்க்கு விற்றது. கூடை தவிர்த்து சில்லரையாக ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கும் போது 600 முதல் 700 ரூபாய் வரை விற்றது.பொரி ஒரு பக்கா 25 முதல் 30 ரூபாய் வரையும், நிலக்கடலை கிலோ 200 ரூபாய் வரையும், தென்னை இலை தோரணங்கள் ஐந்து 50 ரூபாய்க்கும். பேப்பர் தோரணங்கள் அழகுக்கு ஏற்றாற்போலும், விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.

பூமார்க்கெட்டில் சமூக இடைவெளி, மாஸ்க் விதிமுறைகள் காற்றில் பறந்தன. மாநகராட்சி நிர்வாகத்தின் பாலித்தீன் பைக்கான தடை உத்தரவு போன இடம் தெரியவில்லை.பூக்கள் விலை(கிலோ)மல்லி, முல்லை - ரூ.3,000 ஜாதிப்பூ - ரூ.4,000 ரோஜாப்பூ - ரூ.1000 பன்னீர் ரோஜா - ரூ.600 பட்டுப்பூ - ரூ.500 துளசி - ரூ.300

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X