பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை 'விர்' அரும்பு கிலோ ரூ. 700க்கு விற்பனை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-ஆயுத பூஜையை முன்னிட்டு, கடலுாரில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து, 200க்கு விற்ற அரும்பு 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகள், அலுவலகங்களில் வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பூஜை செய்து வழிபடுவர்.அதையொட்டி, கடலுாரில் அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை கன்றுகள், தோரணம்,
 ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை 'விர்' அரும்பு கிலோ ரூ. 700க்கு விற்பனை

கடலுார்-ஆயுத பூஜையை முன்னிட்டு, கடலுாரில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து, 200க்கு விற்ற அரும்பு 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகள், அலுவலகங்களில் வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பூஜை செய்து வழிபடுவர்.அதையொட்டி, கடலுாரில் அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை கன்றுகள், தோரணம், இனிப்புகள் விற்பனை நேற்று களை கட்டியது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட இடங்கள், சாலையோர கடைகளிலும் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.கடலுாரில் வழக்கத்தைவிட பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.100க்கு விற்ற சாமந்தி 200க்கும், 100க்கு விற்ற ரோஸ் 240, அரும்பு 250ல் இருந்து 700 க்கும், குண்டுமல்லி 300ல் இருந்து 700க்கும், 100க்கு விற்ற அரளி 400 க்கும், கேந்தி 20ல் இருந்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆயுதபூஜையை தொடர்ந்து விஜயதசமி என, பண்டிகை நாட்கள் என்பதால், பூக்கள் விலை உயர்வு தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X