சாலை சந்திப்புகளில் ரிப்ளக்டர் அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை சந்திப்புகளில் 'ரிப்ளக்டர் ' அவசியம்

Added : அக் 14, 2021
Share
மந்தாரக்குப்பம்-மந்தாரக்குப்பம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரிப்ளக்டர்கள் இல்லாததால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர்.மந்தாரக்குப்பம் வழியாக தினசரி காலை மற்றும் இரவு நேரத்தில் திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்துார், கேரளா உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்கு இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள்

மந்தாரக்குப்பம்-மந்தாரக்குப்பம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரிப்ளக்டர்கள் இல்லாததால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர்.மந்தாரக்குப்பம் வழியாக தினசரி காலை மற்றும் இரவு நேரத்தில் திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்துார், கேரளா உள்ளிட்ட பல்வேறுபகுதிகளுக்கு இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியில் நான்கு வழிச்சாலையாக துவங்கும் இடத்தில்ரிப்ளக்டர்கள் இல்லாததால் வாகன ஒட்டிகள் சென்டர் மீடியனில் மோதி அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர்.இப்பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் ரிப்ளக்டர் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X