பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மக்கள் தொடர்பு அலுவலகம், சுகாதாரப்பணிகள் ஆகியன சார்பில், நடந்த முகாமிற்கு கடலுார் கோட்ட அஞ்சலகத்துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன், தலைமை ஆசிரியர் அமுதா முன்னிலை வகித்தனர். புதுச்சேரி

நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மக்கள் தொடர்பு அலுவலகம், சுகாதாரப்பணிகள் ஆகியன சார்பில், நடந்த முகாமிற்கு கடலுார் கோட்ட அஞ்சலகத்துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன், தலைமை ஆசிரியர் அமுதா முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அமிர்தாதேவி, அஞ்சலகத்துறை துணை கண்காணிப்பாளர் மணிவேல், மக்கள் தொடர்பு அலுவலர் தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி மாணவிகளுக்கிடையே நடந்த கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மூலம் ரத்த சோகை நோயை தடுத்தல், துாய்மை இந்தியா இயக்கம், கொரோனா தடுப்பூசியின் அவசியம், டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது. மக்கள் தொடர்பு கள அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X