பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் கோரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திற்குள் வெளியூர், உள்ளூர் பஸ்கள் சரிவர வருவதில்லை. இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் மணிமாறன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கிேஷார்குமார்,

சேத்தியாத்தோப்பு-பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திற்குள் வெளியூர், உள்ளூர் பஸ்கள் சரிவர வருவதில்லை. இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் மணிமாறன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கிேஷார்குமார், செங்குட்டுவன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமனை சந்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலைய வணிக வளாகத்தில், ஓட்டல்கள், ஸ்வீட் மற்றும் பேக்கரி , சலுான்கள், டீ, குளிர் பானம், பெட்டி கடைகள், பூ, பழம், காய்கறி கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.வியாபாரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வியாபாரமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மூன்று மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.நகர்புறம் மற்றும் கிராமப்புற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல், ராஜிவ்காந்தி பஸ் நிறுத்தத்தோடு திரும்பி செல்கின்றன.பஸ் நிலையத்திற்குள் வராததால், வியாபாரமின்றி வியாபாரிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X