பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம்; விவசாயிகளுக்கு அழைப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கடலுார்-விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்துபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கடலுார் விற்பனைக்குழு செயலாளர் ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் முதுநகர், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திருமுட்டம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய

கடலுார்-விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்துபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கடலுார் விற்பனைக்குழு செயலாளர் ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் முதுநகர், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திருமுட்டம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளது.இங்கு, நெல், மணிலா, எள், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, கம்பு, ராகி, வரகு, முந்திரி, மக்காசோளம் மற்றும் தேங்காய் பருப்பு ஆகிய விவசாய விளை பொருட்கள் மறைமுக ஏலம் மூலமாக போட்டி விலையில் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.உடனடியாக பணம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. நல்ல விலை கிடைக்காத காலங்களில்விளைபொருட்களை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 30,100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளில் 15 நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் விருப்பத்தின்பேரில் 180 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 10 பைசா வாடகையில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யவும் வசதிகள் உள்ளன.உடனடி பணத்தேவைக்காக விவசாயிகளால் இருப்பு வைக்கப்படும் விளைபொருள் மதிப்பிற்கு ஏற்றவாறு 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வசதி உள்ளது.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தராசு, உலர்களம், விளைப்பொருட்களுக்கு காப்பீடு வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறி, பழங்கள், மலர்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X