சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.1.50 லட்சம் பறிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திட்டக்குடி--ராமநத்தத்தில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி, ரூ.1.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா,45; ராமநத்தம், பெரங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.2525) விற்பனையாளராக உள்ளார்.நேற்று இரவு விற்பனை முடிந்து, பணத்தை எடுத்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு கடையிலிருந்து

திட்டக்குடி--ராமநத்தத்தில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி, ரூ.1.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா,45; ராமநத்தம், பெரங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.2525) விற்பனையாளராக உள்ளார்.நேற்று இரவு விற்பனை முடிந்து, பணத்தை எடுத்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு கடையிலிருந்து புறப்பட்டார்.அப்போது அருகிலுள்ள சோள காட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பிரசன்னாவை வழிமறித்து தாக்கி, அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X