பொது செய்தி

தமிழ்நாடு

மின் வினியோகத்தில் கவனம் பொறியாளர்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில் மின் தடை புகார்களை குறைக்க, மின் வினியோக பணியில் முழு கவனம் செலுத்துமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது.சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், நேற்று வரை, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பாக, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 98 சதவீத புகார்களுக்கு

சென்னை-சென்னையில் மின் தடை புகார்களை குறைக்க, மின் வினியோக பணியில் முழு கவனம் செலுத்துமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது.சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், நேற்று வரை, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பாக, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 98 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மொத்தம் பெறப்பட்ட புகார்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் இருந்து மட்டும் அதிக அளவாக, 3 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.மின் தடை புகார் மீது நடவடிக்கை எடுக்காத, இரு உதவி பொறியாளர்களை, மின் வாரியம், சில தினங்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்தது.இந்நிலையில், சென்னையின் மின் வினியோகம் தொடர்பாக, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினர். அதில், சென்னையில் உள்ள உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர்.மின் வாரிய பொறியாளர்கள், தங்கள் பகுதி புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதுடன், அரசுக்கு அவப்பெயர் பெற்றுத் தரும் நடவடிக்கைகளை தவிர்க்கும் படி, அறிவுறுத்தப்பட்டது. சென்னையில், மின் தடை குறித்த புகார்களை உடனுக்குடன் சரி செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X