பொது செய்தி

தமிழ்நாடு

பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு விரைவில் புது கட்டடம் என விளக்கம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சென்னை-'பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு, விரைந்து புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட் டு உள்ளது' என, போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.'ஆமை வேகத்தில் நகர்கிறது பாண்டி பஜார் காவல் நிலைய பணி' என்ற தலைப்பில், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு வெளியிட்டுள்ள விளக்கம்:'சவுந்திர

சென்னை-'பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு, விரைந்து புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட் டு உள்ளது' என, போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.'ஆமை வேகத்தில் நகர்கிறது பாண்டி பஜார் காவல் நிலைய பணி' என்ற தலைப்பில், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு வெளியிட்டுள்ள விளக்கம்:'சவுந்திர பாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்ற, பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு, 2.96 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட, 2019 ஜன., 3ல், சென்னை பெருநகர காவல் துறை சார்பாக, தமிழக காவல் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.இது தொடர்பாக, 2020, டிச., 3ல், தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றார். அப்போது, தி.நகர் துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் பாண்டிபஜார் காவல் நிலையம், 4.11 கோடி ரூபாயில் கட்டுவது என, முடிவு செய்யப்பட்டு, 2021 செப்., 13ல் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, விரைந்து காவல் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X