பொது செய்தி

தமிழ்நாடு

'ஆட்டிசம்' குழந்தைகளும் சாதிக்கலாம்! பெற்றோருக்கு 'எனர்ஜி' தருகிறார் இந்த இளைஞர்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : ''ஆட்டிசம்' குழந்தைகளுக்கு சரியான பயிற்சியான பயிற்சி கொடுத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க முடியும்,'' என்கிறார் கதிர்வேல். ஈரோடு, சேவூர் பகுதியை சேர்ந்த இந்த 26 வயது இளைஞர், கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, ஆரம்ப காலங்களில் தனியார் 'பிட்னஸ் சென்டரில்' பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர், 'வி ஸ்பின் அகாடமி' துவக்கிய கதிர்வேல், பல்வேறு மாணவ,


கோவை : ''ஆட்டிசம்' குழந்தைகளுக்கு சரியான பயிற்சியான பயிற்சி கொடுத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க முடியும்,'' என்கிறார் கதிர்வேல்.

ஈரோடு, சேவூர் பகுதியை சேர்ந்த இந்த 26 வயது இளைஞர், கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, ஆரம்ப காலங்களில் தனியார் 'பிட்னஸ் சென்டரில்' பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர், 'வி ஸ்பின் அகாடமி' துவக்கிய கதிர்வேல், பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு பிட்னஸ் பயிற்சி அளித்து வந்தார். பிறகு, 'ஆட்டிசம்' மாணவர்களை விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், அம்மாணவர்களுக்கு பிட்னஸ் பயிற்சி அளிக்க முன்வந்தார்.

இரண்டு ஆண்டு தொடர் பயிற்சியால் கோவையில் நடக்கும், 'சைக்கிள் ரேலி', விழிப்புணர்வு சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்று, வெற்றி பெறும் அளவிற்கு அவர்களை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து கதிர்வேலிடம் பேசினோம்...''குழந்தைகள் இப்படி பிறந்து விட்டதே என, வேதனைப்பட்டு பல பெற்றோர் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றனர்.யாரும் கவலைப்பட தேவையில்லை. 'ஆட்டிசம்' குழந்தைகளுக்கு முறையான பிட்னஸ் பயிற்சி அளிக்க வேண்டும். ஆரம்பத்தில், 10 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தேன்.

தற்போது, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தொடர் பயிற்சியின் மூலம், சைக்கிள் ஓட்டும் அளவுக்கு முன்வந்துள்ளனர்.தற்போது, சில மாணவர்கள், 20 கி.மீ., வரை சைக்கிள் ஓட்டும் அளவுக்கு திறனை வளர்த்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவதால், உடல் திறன் மேம்படுவதோடு, புதிய அனுபவம், புத்துணர்வு கிடைக்கிறது,'' என்றார்.''இவர்களுக்கு பயிற்சி அளிக்க அதிக பொறுமை வேண்டுமே...'' என்றோம்.''நீங்கள் கூறுவது மிகவும் சரி. மற்ற நபர்களை போல இவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிது அல்ல. பொறுமையுடன் கையாள வேண்டும். சரியான பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால், சிறந்த விளையாட்டு வீரர்களாக ஆட்டிசம் குழந்தைகளை உருவாக்க முடியும்,'' என்றார்.ஆட்டிசம் என்பது என்னவென்றால்...!'ஆட்டிசம்' (மதியிறுக்கம்) என்பது, மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. பேச்சு திறன், சமுதாய தொடர்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

மற்றவர்களை போல் இயல்பாக வாழ முடியாது. இவர்களுக்கு தேவையான பயிற்சி, சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைத்தால், பல்வேறு துறையில் சாதனை படைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X