விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு

Added : அக் 14, 2021
Share
சென்னை--விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு 25.92 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.பெருங்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 39; தனியார் 'டிவி' நிருபர். இவர், 2019 ஜூனில், தாம்பரம் பிரதான சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது அதிவேகமாக வந்த 'கான்கிரீட் ரெடிமிக்ஸ்' லாரி, செந்தில்குமார் பைக் மீது மோதியது. இதில்

சென்னை--விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு 25.92 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.பெருங்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 39; தனியார் 'டிவி' நிருபர். இவர், 2019 ஜூனில், தாம்பரம் பிரதான சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது அதிவேகமாக வந்த 'கான்கிரீட் ரெடிமிக்ஸ்' லாரி, செந்தில்குமார் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, செந்தில்குமாரின் மனைவி சர்வேஷ்வரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி எஸ்.அல்லி முன் நடந்தது. விசாரணையில் மனுதாரர் கணவர் இறப்புக்கு, லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 25.92 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், கான்கிரீட் ரெடிமிக்ஸ் நிறுவனம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X