பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர் பற்றாக்குறை; 13 ஆண்டுகளாக நிரப்பவில்லை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : கோவை பாரதியார் பல்கலையில், 13 ஆண்டுகளாக அலுவலக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால், காலிப்பணியிட எண்ணிக்கை, 283 ஆக உயர்ந்துள்ளது.2007க்கு பின், இப்பல்கலையில், ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை. தினக்கூலி அடிப்படையில், 483 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தினக்கூலி முறை பின்பற்றப்படுவதால், ஆண்டுக்கு பல கோடி ரூபாய்

கோவை : கோவை பாரதியார் பல்கலையில், 13 ஆண்டுகளாக அலுவலக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால், காலிப்பணியிட எண்ணிக்கை, 283 ஆக உயர்ந்துள்ளது.2007க்கு பின், இப்பல்கலையில், ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை.

தினக்கூலி அடிப்படையில், 483 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தினக்கூலி முறை பின்பற்றப்படுவதால், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் பல்கலைக்கு நிதி இழப்பீடு ஏற்படுகிறது. தற்சமயம், அரசு அனுமதியளித்த, 283 பணியிடங்கள் காலியாக உள்ளன.இது குறித்து, பல்கலை தரப்பில் கேட்டபோது, 'கடந்த காலங்களில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டன.

ஆனால், உயர்கல்வித்துறை தரப்பில், உயர் பதவிகளுக்கு டி.ஆர்.பி., மூலமும், அலுவலக பணியாளர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலமும் ஆட்கள் வெளிப்படையாக தேர்வு செய்யப்போவதாக தெரிகிறது. பல்கலையின் காலிப்பணியிட பட்டியல்களை சமர்ப்பித்துள்ளோம். அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, நாங்கள் இதில் முடிவெடுக்க இயலாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X