சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சதி செய்து வெற்றியை தட்டிப் பறித்த தி.மு.க., அய்யப்பன்தாங்கல் சுயேச்சை வேட்பாளர் புகார்

Added : அக் 14, 2021
Share
Advertisement
குன்றத்துார்---அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில், முதலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மறு எண்ணிக்கைக்குப் பின், தி.மு..க, வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய, ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஓட்டு

குன்றத்துார்---அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில், முதலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மறு எண்ணிக்கைக்குப் பின், தி.மு..க, வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய, ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாங்காடு முத்துக்குமரன் கல்லுாரியில் நடந்தது.நேற்று முன்தினம் காலை காலை 11:00 மணிக்கு துவங்கி, நேற்று மதியம் 12:00 மணி வரை, விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், 42 ஊராட்சிகளுக்கான வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவருக்கு, சுயேச்சையாக கல்யாணி பெரியநாயகம் மற்றும் தி.மு.க., சார்பில் ஜெமீலா பாண்டுரங்கன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.நேற்று அதிகாலை, ஓட்டு எண்ணிக்கை முடிவில், ஜெமீலா பாண்டுரங்கன் வெற்றி பெற்று விட்டதாக, அவரது ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். ஆனால், கல்யாணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நேற்று காலை, மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.இதற்கிடையில், மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஓட்டு எண்ணும் மையத்தின் வாசலில், குன்றத்துார்- - குமணன்சாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வெற்றி பெற்றவர் விபரம் அறிவித்த பின், ஏன் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். வெற்றியை பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக சுயேச்சை வேட்பாளர் புகார் தெரிவித்தார். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், மறு ஓட்டு எண்ணிக்கையில், 160 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ஜெமீலா பாண்டுரங்கன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி, சதி செய்து வேண்டுமென்றே தன் வெற்றியை தட்டிப்பறித்துள்ளதாக, சுயேச்சை வேட்பாளர் கல்யாணி பெரியநாயகம் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X