பொது செய்தி

தமிழ்நாடு

சரியான பதில் அளிக்காதது ஏன்! தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காத, கோவை மாநகராட்சி அதிகாரியை, தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்துள்ளது.கோவை, விளாங்குறிச்சி, ஸ்ரீஅம்பாள் நகரை சேர்ந்த ரவிசங்கர், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க தலைவராக இருக்கிறார். 32வது வார்டு, சேரன் நகரில் ரூ.75 லட்சத்தில் மழை நீர் வடிகால் கட்டியது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை

கோவை : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காத, கோவை மாநகராட்சி அதிகாரியை, தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்துள்ளது.

கோவை, விளாங்குறிச்சி, ஸ்ரீஅம்பாள் நகரை சேர்ந்த ரவிசங்கர், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க தலைவராக இருக்கிறார். 32வது வார்டு, சேரன் நகரில் ரூ.75 லட்சத்தில் மழை நீர் வடிகால் கட்டியது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டு, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனருக்கு விண்ணப்பித்திருந்தார்.

இவர் கொடுத்த பதிலில் திருப்தி இல்லாமல், மேல்முறையீட்டு அலுவலரான, மாநகராட்சி துணை கமிஷனருக்கு விண்ணப்பித்தார். பின், தகவல் ஆணையருக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்திருக்கிறார்.இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், ஜூலை, 14க்குள் தகவல் அளிக்க, மேல்முறையீட்டு அலுவலருக்கு அறிவுறுத்தியது. அவ்வாறு வழங்காவிட்டால், ஆணையத்துக்கு தெரிவிக்க, விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட்டது.

கேட்ட தகவல் கொடுக்கவில்லை என மீண்டும் முறையிட்டதால், மாநில தகவல் ஆணையர் தனசேகரன் முன்னிலையில், சில நாட்களுக்கு முன், தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டது.அப்போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 6 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், ரூ.75 லட்சத்துக்கு மழை நீர் வடிகால் கட்டியது தொடர்பான விபரம், 32வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை ஆகிய இரு கேள்விகளுக்கு, மாநகராட்சி வழங்கிய பதில் திருப்தியில்லை என, விண்ணப்பதாரர் தெரிவித்திருக்கிறார்.

அதன்பின், பொது தகவல் அலுவலரிடம் விசாரிக்கப்பட்டது. அவர் கொடுத்த பதில் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த ஆணையம், 'விண்ணப்பதாரர் கேட்ட தகவலை, 15 நாட்களுக்குள் கட்டணமின்றி, பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் ஒப்புகைச்சீட்டு மற்றும் அத்தகவலை அறிக்கையாக தயாரித்து, ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். தகவல் தர தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமை சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளது.இது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X