பொது செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன்; இவரது மகன் மோதி பாலாஜி, 29. இவருக்கும் அதே பகுதியிலுள்ள தியாகராய வீதியை சேர்ந்த காவ்யா, 24 என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கோவை : வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன்; இவரது மகன் மோதி பாலாஜி, 29. இவருக்கும் அதே பகுதியிலுள்ள தியாகராய வீதியை சேர்ந்த காவ்யா, 24 என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 37 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணத்துக்கு பின் கணவர் மற்றும் அவரது தந்தை சீனிவாசன், தாய் ஜெயஸ்ரீ ஆகியோர் மேலும், 50 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு பெண்ணுக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.காவ்யாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசில் காவ்யா புகார் அளித்தார்.கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கூட்டு சதி ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X