பொது செய்தி

தமிழ்நாடு

கோகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கண்காட்சி

Added : அக் 14, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--நென்மேலி கோகுலம் பப்ளிக் பள்ளியில், நவராத்திரி விழாவையொட்டி, கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி மெட்ரோ சமீரா கார்டன் பகுதியில், கோகுலம் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்குகிறது.இப்பள்ளியில், நவராத்திரி எட்டாவது நாளில், 'மக்கள் சேவையே மகேசன் சேவை' எனும் தலைப்பில், கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி,

செங்கல்பட்டு--நென்மேலி கோகுலம் பப்ளிக் பள்ளியில், நவராத்திரி விழாவையொட்டி, கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி மெட்ரோ சமீரா கார்டன் பகுதியில், கோகுலம் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்குகிறது.இப்பள்ளியில், நவராத்திரி எட்டாவது நாளில், 'மக்கள் சேவையே மகேசன் சேவை' எனும் தலைப்பில், கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி, பள்ளியின் முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன் தலைமையில், நேற்று நடந்தது. செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, கண்காட்சியை துவக்கினார்.மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல மாதிரி படைப்புகள், கொலுவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கொரோனா நிவாரண நிதி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.இது போன்ற விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கு உதவும் வகையில், பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், துணை தலைவர்கள் பிரவீன், லிஜிஷா பிரவீன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X