பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு வந்தது கரும்பு! மார்க்கெட்டில் களைகட்டுது தோரணம், வாழைக்கன்று

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : நவராத்திரியின் நிறைவு நாளான சரஸ்வதி, ஆயுத பூஜை, விஜயதசமி விழா வழிபாடுகளுக்காக கோவை மார்க்கெட்டிற்கு கரும்பு ரகங்கள் விற்பனைக்கு வந்தன.வழக்கமாக பொங்கல் விழாவுக்கு கரும்பு வகைகள் விற்பனைக்கு வரும். அதையடுத்து சரஸ்வதி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நாளில் வழிபாட்டுக்கு கரும்பு பயன்படும். அதற்காக கோவை டி.கே.மார்க்கெட், உக்கடத்துக்கு கரும்பு விற்பனைக்கு வந்தது.ஒரு
 சரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு வந்தது கரும்பு!   மார்க்கெட்டில் களைகட்டுது தோரணம், வாழைக்கன்று


கோவை : நவராத்திரியின் நிறைவு நாளான சரஸ்வதி, ஆயுத பூஜை, விஜயதசமி விழா வழிபாடுகளுக்காக கோவை மார்க்கெட்டிற்கு கரும்பு ரகங்கள் விற்பனைக்கு வந்தன.வழக்கமாக பொங்கல் விழாவுக்கு கரும்பு வகைகள் விற்பனைக்கு வரும்.

அதையடுத்து சரஸ்வதி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நாளில் வழிபாட்டுக்கு கரும்பு பயன்படும். அதற்காக கோவை டி.கே.மார்க்கெட், உக்கடத்துக்கு கரும்பு விற்பனைக்கு வந்தது.ஒரு ஜோடி கரும்பு 60 ரூபாய்க்கு விற்றது. இதே போல் வாழை கன்றுகள், தோரணங்கள் ஆகியவற்றின் விற்பனையும் துவங்கியுள்ளது.இன்றும் நாளையும் சரஸ்வதி, ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுவதால் நிவேதனம் செய்வதற்காக, காபூல் சுண்டல், கொண்டைகடலை, பாசிப்பயறு, சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல், உளுந்து மற்றும் பருப்பு வடை, நெய்அப்பம், பணியாரம் ஆகியவை தயாரித்து கொடுப்பதற்கான முன்பதிவும் துவங்கி விட்டது.பூமார்க்கெட், டி.கே.மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், லைட்ஹவுஸ் வீதி மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.அவங்க பார்த்துக்குவாங்க! பூஜைகளுக்கான ஏ டூ இசட் பணிகளை செய்து கொடுக்கவும், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

அதே போல் அலுவலகத்தை சுத்தப்படுத்தி டெக்கரேஷன் செய்வதற்கும், கட்டணம் நிர்ணயித்து வர்த்தகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.சுவாமி படம், பூமாலை, அய்யர், பூஜை பொருட்கள், சுண்டல், இனிப்பு, காரம், காலை டிபன் சகிதமாக சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாட, சக்திக்கு தகுந்தாற் போல் இவர்களிடம் பேக்கேஜூம் பேசிக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X