பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி: கோவை மாநகராட்சியில் துவக்கம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கோவையில் நேற்று துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் இதுவரை, 26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 9.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கி இருப்போரை தேடிச் சென்று, தடுப்பூசி போட
 வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி: கோவை மாநகராட்சியில் துவக்கம்

கோவை : வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கோவையில் நேற்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை, 26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 9.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கி இருப்போரை தேடிச் சென்று, தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஐந்து 'மொபைல் யூனிட்'டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.கோவையில் திட்டத்தை துவக்கி வைத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:மாநில எல்லைகளை கண்காணித்து, தொடர் நடவடிக்கையை எடுத்ததால், தொற்று பரவல் குறைந்திருக்கிறது. கோவையில் 87 சதவீதத்தினருக்கு முதல் தவணை, 37 சதவீதத்தினருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, மாநில பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

மாநில அளவில் முதல் டோஸ் செலுத்தியிருப்பது, 67 சதவீதம். ஆனால், கோவையில் மட்டும், 87 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.மெகா சிறப்பு முகாம், ஐந்து நாட்கள் நடத்தியதில், 5.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் 'மொபைல் யூனிட்' திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.'அம்மா கிளினிக்' குறுகிய காலத்திட்டம்கோவை அரசு மருத்துவமனையில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், '' பிறந்து 28 நாட்களுக்குள்ளாக வெவ்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், சிறப்பு கவனிப்பு மையத்தில் பராமரிக்கப்படுவர். கோவையில் தனியார் பங்களிப்பு நிதி மூலம் 7,121 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 'அம்மா கிளினிக்' ஒரு குறுகிய காலத்திட்டம், அத்திட்டம் முடிவடைந்து விட்டது. அதில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.கலெக்டர் சமீரன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X