சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் 'தீபாவளி வசூல்' வேட்டை? உதவி இயக்குனர் அலுவலகத்தில் 'ரெய்டு'

Added : அக் 14, 2021
Share
Advertisement
ஊட்டி : ஊட்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத, 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும், 11 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ்
 ஊட்டியில் 'தீபாவளி வசூல்' வேட்டை? உதவி இயக்குனர் அலுவலகத்தில் 'ரெய்டு'

ஊட்டி : ஊட்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத, 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும், 11 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமையில் அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.'கூட்டத்தில் பங்கேற்க வந்த செயல் அலுவலர்கள், தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு பணம் கொடுக்க உள்ளனர்' என, ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் உள்ளிட்டோர் நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், ஐந்து செயல் அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் என ஏழு பேர் அலுவலகத்தில் இருந்துள்ளனர். சோதனையில், கணக்கில் வராத, 80 ஆயிரத்து 190 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X