பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்கள் அட்டகாசம் போலீசார் அதிரடி நடவடிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
மாதவரம்--மாநகர பேருந்தில், ஓட்டுனர், நடத்துனர், பயணிருக்கு தொல்லை கொடுத்த, கல்லுாரி மாணவர்களின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பெற்றோர் அழைத்து வந்து பெற்றுக்கொள்ளுமாறு எச்சரித்து அனுப்பினர்.சென்னை புழலில் இருந்து, நேற்று காலை, 9:00 மணி அளவில், வள்ளலார் நகருக்கு, 'வழித்தடம், 57-ஏ' மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில், வடசென்னையில் உள்ள, அரசு மற்றும்

மாதவரம்--மாநகர பேருந்தில், ஓட்டுனர், நடத்துனர், பயணிருக்கு தொல்லை கொடுத்த, கல்லுாரி மாணவர்களின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பெற்றோர் அழைத்து வந்து பெற்றுக்கொள்ளுமாறு எச்சரித்து அனுப்பினர்.சென்னை புழலில் இருந்து, நேற்று காலை, 9:00 மணி அளவில், வள்ளலார் நகருக்கு, 'வழித்தடம், 57-ஏ' மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில், வடசென்னையில் உள்ள, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் பயணித்தனர். அவர்கள், முக கவசம் அணியாமலும், ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மற்ற பயணியருக்கு இடையூறாக, கூச்சல் போட்டு அட்டகாசம் செய்தனர். சிலர் படிகட்டுகளில் தொங்கியபடி பயணித்தனர். படிகட்டில் தொங்கிய மாணவர்களை, பேருந்து உள்ளே வருமாறு, நடத்துனர் மற்றும் ஓட்டுனர் அறிவுறுத்தினர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். மேலும், கல்லுாரிகள் திறந்தது முதல், 'ரூட்டு தல' பிரச்னையால், மாணவர்கள், பேருந்து மற்றும் ரயில்களில், பயணியரை அச்சுறுத்தும் வகையில் மோதிக்கொள்ளும், சம்பவங்கள் தொடர்கின்றன.இதனால், அச்சத்திற்குள்ளான பேருந்து ஊழியர்கள், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மாதவரம் போலீசார் முன், பேருந்தை நிறுத்தினர். அங்கிருந்த போலீசாரிடம், மாணவர்களின் அட்டகாசம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, அட்டகாசம் செய்த, 10 மாணவர்களை கீழே இறக்கி, அவர்களது கல்லுாரி அடையாள அட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் முன்னிலையில், அடையாள அட்டையை திரும்பப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடந்து கொண்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அந்தந்த கல்லுாரி நிர்வாகத்திற்கும், தகவல் தெரிவிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது என்றும் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X