சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்..

Added : அக் 14, 2021
Share
Advertisement
இளநீர் வியாபாரி தற்கொலைவியாசர்பாடி: வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த முருகேசன், 47, பாரிமுனையில் இளநீர் வியாபாரம் செய்தார்.மதுவுக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி முருகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவும், குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.பின், திடீரென பெட்ரோல் ஊற்றி தீ

இளநீர் வியாபாரி தற்கொலைவியாசர்பாடி: வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த முருகேசன், 47, பாரிமுனையில் இளநீர் வியாபாரம் செய்தார்.மதுவுக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி முருகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவும், குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.பின், திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த முருகேசனை, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா வியாபாரிகளுக்கு 'காப்பு'மாதவரம்: சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன் மேடு, பெரிய சாலையை சேர்ந்த முரளி, 26; கொளத்துார், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 21; ஆகியோர், மாதவரம் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்று வந்தனர். நேற்று முன் தினம் இரவு, அங்குள்ள பனந்தோப்பு பகுதியில் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில், மண்ணடியைச் சேர்ந்த அப்துல் சமீர், 48; பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது இம்ரான், 18, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும், 2 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து தலைமறைவான ஜாகிர் உசேன் என்பவரை தேடுகின்றனர்.குடிநீர் ஆலைக்கு 'சீல்'எம்.கே.பி.நகர்: சென்னை எம்.கே.பி.நகர் 1வது குறுக்குத் தெருவில், தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. மூன்று ஆண்டுகளாக, இந்த ஆலை உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது.மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஆலை நிர்வாகத்தினர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை பூட்டி, நேற்று 'சீல்' வைத்தனர். பூச்சி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலைதண்டையார்பேட்டை: சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர், வரலட்சுமி, ௨௧. அதே பகுதியில் உள்ள அரிசி குடோனில் வேலை பார்க்கிறார். அங்கு, அரிசியில் வண்டு வராமல் இருக்கும் மருந்து பவுடரை சாப்பிட்டு, வரலட்சுமி மயக்கம் அடைந்தார்.தகவல் அறிந்து, வரலட்சுமியை, அவரது குடும்பத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வரலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்புபுழல்: சென்னை புழல், திருப்பூர் குமரன், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ், 50. அவர், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். நேற்று மதியம், 2:05 மணிக்கு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக, புழல் போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தனர். வீட்டு கதவு உள்பக்கம் தாழிடப்படாமல், மூடிய நிலையில் கிடந்தது.கதவை திறந்து போது, செல்வராஜ், நாற்காலியில் அமர்ந்த நிலையில், இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது சடலத்தை, போலீசார் மீட்டு, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X