பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சியில் வெற்றி

Added : அக் 14, 2021
Share
Advertisement
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சியில் வெற்றிசெய்யூர் முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், 16ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தலைவரும், திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் 26ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சியில் வெற்றிசெய்யூர் முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், 16ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தலைவரும், திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் 26ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.திருப்போரூர் ஒன்றியத்தில், திருப்போரூர் முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், திருப்போரூர் ஒன்றியத்தில், 3ம் வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில், இவர்கள் மூன்று பேரும் வெற்றி பெற்று, ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்வாயினர்.முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனபாலின் மனைவி காயத்ரி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கல்பாக்கம் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X