பொது செய்தி

தமிழ்நாடு

கலாம் பெருமை பேசும் 'டி-ஷர்ட்' கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் கல்லுாரி மாணவர்கள், அப்துல் கலாமின் பெருமை பேசும், 'டி-ஷர்ட்' வடிவமைத்து அசத்தியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான அக்., 15ல் உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருப்பூர் 'நிப்ட்-டீ' பேஷன் கல்லுாரி மாணவர்கள், கலாமின் பெருமை பேசும், டி- ஷர்ட்டுகளை வடிவமைத்துள்ளனர்.மாணவ, மாணவியர் 130 பேர், ஐந்து குழுக்களாக
 கலாம் பெருமை பேசும் 'டி-ஷர்ட்' கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர் : திருப்பூர் கல்லுாரி மாணவர்கள், அப்துல் கலாமின் பெருமை பேசும், 'டி-ஷர்ட்' வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான அக்., 15ல் உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருப்பூர் 'நிப்ட்-டீ' பேஷன் கல்லுாரி மாணவர்கள், கலாமின் பெருமை பேசும், டி- ஷர்ட்டுகளை வடிவமைத்துள்ளனர்.மாணவ, மாணவியர் 130 பேர், ஐந்து குழுக்களாக பிரிந்து, ஏழு மணி நேரத்தில், 130 டி-ஷர்ட்டுகளில், கலாம் ஓவியம் தீட்டியுள்ளனர்.

அக்னி ஏவுகனை உள்பட வானியல் துறை சார்ந்த சாதனைகள், பசுமை பாதுகாப்பு, 'விஷன் -2020' கனவு; கலாம் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை தத்ரூபமாக தீட்டியுள்ளனர்.பல்வேறு வண்ண கலவைகளை குழைத்து, கைகளாலேயே அழகிய ஓவியங்களை டி-ஷர்ட்டுகளில் வரைந்துள்ளனர். தாங்கள் வடிவமைத்த டி-ஷர்ட்டுகளை அணிந்து, லட்சிய கனவை நோக்கி பயணிப்போம் என, மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X