சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி உயிரை விட காசுதான் முக்கியம்: அரசு டாக்டர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

Updated : அக் 15, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
உடுமலை : 'அரசு மருத்துவமனையில் அலட்சியமாகவும், தனியார் மருத்துவமனையில் பணம் பறிக்கும் டாக்டராகவும் வலம் வந்த ஜோதிமணி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவைச்சேர்ந்த, மருதமுத்து மனைவி ராஜராஜேஸ்வரி,24. இவருக்கு, செப்., 23ல் பிரசவ வலி ஏற்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனை மகப்பேறு
கர்ப்பிணி உயிரை விட காசுதான் முக்கியம்: அரசு டாக்டர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

உடுமலை : 'அரசு மருத்துவமனையில் அலட்சியமாகவும், தனியார் மருத்துவமனையில் பணம் பறிக்கும் டாக்டராகவும் வலம் வந்த ஜோதிமணி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவைச்சேர்ந்த, மருதமுத்து மனைவி ராஜராஜேஸ்வரி,24. இவருக்கு, செப்., 23ல் பிரசவ வலி ஏற்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி, 'வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது.

தானாக வெளியில் வந்து விடும்' என கூறி விட்டு, நான்கு நாட்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 'இங்கு முடியாது; விநாயக் மெடிக்கல் சென்டருக்கு கொண்டு செல்லுங்கள்' என கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கும் ஜோதிமணியே இருந்துள்ளார். 'உடனடியாக, 40 ஆயிரம் ரூபாய் கட்டுங்கள்; ஆபரேஷன் செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார். பணத்தை செலுத்திய பின், சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து, திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், ராஜராஜேஸ்வரியின் கணவர் மருதமுத்து புகார் அளித்தார். இதையடுத்து, டாக்டர் ஜோதிமணி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


ஆர்.டி.ஓ., அறிக்கை


கலெக்டர் உத்தரவின்படி, உடுமலை ஆர்.டி.ஓ., கீதா விசாரணை மேற்கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஜோதிமணி செய்த அறுவை சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆர்.டி.ஓ., கீதா கூறுகையில்,''டாக்டர் ஜோதிமணி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியான நிலையில், அது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கலெக்டர் வினீத் கூறுகையில்,''ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கை, மருத்துவ பணிகள் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில்,''கடந்த 5ம் தேதி, ஜோதிமணி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அறிக்கையின் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.


வீட்டுக் கதவில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு


டாக்டர் ஜோதிமணி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த உத்தரவையும் பெறாமல், அலட்சியமாக இருந்தார்.அவரது வீட்டுக்கதவில், டிரான்ஸ்பர் உத்தரவுமருத்துவ பணிகள் துறையினரால் ஒட்டப்பட்டது.அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் ஆதரவுடன் தனி ஆதிக்கம் செலுத்தி, உயர் அதிகாரிகளையும், அரசு மருத்துவமனை பணியாளர்களையும் அலற விட்டுள்ளார். அவரது கணவரும் உணவு பாதுகாப்பு துறையில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றி, தற்போது, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-அக்-202114:06:12 IST Report Abuse
Swaminathan Chandramouli நமது இரு தமிழக அரசுகளும் குறிப்பிட்ட கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன முதல் கொள்கை , போலீஸ் ?அவர்கள் எந்தவிதமான குற்றங்களை செய்தாலும் துறை சார்ந்த விசாரணை என்ற பெயரில் அந்த துறையை சார்ந்த உயர் போலீஸ் அதிகாரியால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் , இரண்டாவதாக வேறு காவல் நிலையத்துக்கு மாற்ற படுவர் , அந்த காவலர் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படமாட்டாது அவர் கைது செய்யப்படமாட்டார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய படமாட்டார் சில நாட்கள் கழித்து பழைய காவல் நிலையத்துக்கே மாற்ற படுவார் பின் அங்கு பழைய மாதிரியே லஞ்சம் வாங்குவார் . அந்த லஞ்சத்தில் இருந்து பாதாளத்தில் இருந்து வானம் வரை இருக்கும் போலீஸ் அதிகாரிகள் அரசியல் வியாதிகள் அமைச்சர்கள் அவர் அவர்களுக்கு உரிய பங்கு தவறாமல் கிடைக்கும் இதன் தொடக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி புரியும் திராவிடக்கட்சிகளால் ஆரம்பிக்க பட்டது , அது போன்றே அரசு மருத்துவ சாலை மருத்துவர்கள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் பாதிக்க பட மாட்டார்கள் ,
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
15-அக்-202117:40:18 IST Report Abuse
visu இந்த துறை ரிதியான நடவடிக்கை என்பதே குற்றத்தை மறைப்பதுதான் அல்லது குறைந்த தண்டனை அளித்து சக பணியாளரை காப்பதுதான் எட மாறுதல் ஓதிய உயர்வு ஒருவருடம் நிறுத்தம் எல்லாம் இந்த குற்றங்களை சீரியஸ் ஆக கருதவில்லை என்று அர்த்தம்
Rate this:
Cancel
Raj - chennai,இந்தியா
15-அக்-202116:45:01 IST Report Abuse
Raj This is our law and law books says....make mistake you will be transferred and provided new location to loot. Looking at the happenings its better we have all tem under privatization. Bloody govt sucking Tax from people like me and running this level of admiration. Why this doctor was not dismissed ? Only person I see who made mistake is Mr. Ambedkar deriving such useless laws.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X