பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்களைத் தடுக்க புது திட்டம்!

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பயங்கரவாத செயல்களை ஒடுக்கும் வகையில், பல அமைப்புகள் இணைந்து தேசிய அளவில் செயல்படும் புதிய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள்
Kashmir, Terrorism, Jammu and Kashmir

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பயங்கரவாத செயல்களை ஒடுக்கும் வகையில், பல அமைப்புகள் இணைந்து தேசிய அளவில் செயல்படும் புதிய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் ஆய்வு செய்தார். பல்வேறு புலனாய்வு அமைப்பின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் புதிய யுக்தி வகுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை அடிப்படையாக வைத்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும், 28 மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும். தற்போது முதல் கட்டமாக, காஷ்மீரைத் தவிர, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த அமைப்புகள், அந்தந்த மாநிலப் போலீசாருடன் இணைந்து, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதனடிப்படையில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


பயங்கரவாதி சுட்டுக் கொலை


ஜம்மு - காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
14-அக்-202116:32:24 IST Report Abuse
sankaseshan முதலுலில் சூரியை என்சௌண்டேர் பண்ணனும்
Rate this:
Suri - Chennai,இந்தியா
14-அக்-202117:31:03 IST Report Abuse
Suriஅண்ணனுக்கு பத்து டஜன் ஜெலுசில் பார்சல். மாநில தேர்தல் வருது இல்லையா.. இனி இப்படிப்பட்ட செய்திகளை அதிகம் பார்க்கலாம்....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
14-அக்-202113:18:32 IST Report Abuse
Soumya முட்டிக்கு முட்டி தட்டினால் மூர்க்க பயங்கரவாதிங்க மாட்டுவானுங்க
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-அக்-202112:47:23 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN தமிழகத்திலும் கேரளத்திலும் கூட தீவிர கவனம் செலுத்துவதற்கு மத்திய பாதுகாப்பு பிரிவு திட்டம் தீட்டி வேண்டும், இங்கு பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், மதமாற்ற கும்பல்கள், லவ் ஜிகாத் கூட்டங்கள், நக்சல்பாரிகள் சந்தடி இல்லாமலும் சில இடங்களில் வெளிபடையாகவும் நமது தேசதுக்கு பண்பாடிற்கும் எதிராக செயல் படுகிறார்கள். மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். வந்தேமாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X