அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி; கமல் கட்சியிலும் 2 பேர் வெற்றி

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர். 'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ,
Vijay, Kamal, Kamal Haasan

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர். 'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, விஜய் பெயர் மற்றும் படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டிருந்தது. போட்டியிட்ட 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

'விஜயகாந்த் பாணியில் சினிமாவுக்கு வந்த விஜய், தற்போது அவரைப் போலவே, அரசியலிலும் வெற்றித் தடத்தை ஆரம்பித்துள்ளார்' என்றும், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது' என்றும், விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.


ம.நீ.மய்யத்தில் 2 பேர் வெற்றி


ஊரக உள்ளாட்சி தேர்தலில், இருவர் மட்டுமே வெற்றி பெற்று மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை காப்பாற்றி உள்ளனர்.


latest tamil news


ஊரக உள்ளாட்சி தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. அதில், கமலின் மக்கம் நீதி மய்யம் கட்சியும் அடங்கும். ஆனாலும், அக்கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகரச் செயலர் குமார்; தென்காசி மாவட்டம், குவளைக்கன்னி பஞ்சாயத்து, சிவலிங்கபுரம் கிராமம், முதலாவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், பழவேலி கிராம ஊராட்சி, நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அனிதா பாபுவும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், 'டுவிட்டர்' பதிவில், 'நடந்தது ஒரு தேர்தல்; இதற்கோர் ஓட்டு எண்ணிக்கை; வெற்றி பட்டியல். பேசாமல், ஆள்பவர்களே ஆட்களை நியமித்துவிட்டு போயிருக்கலாம்; அரசு பணம் மிச்சம்' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-அக்-202123:39:33 IST Report Abuse
Vena Suna வேற ஒன்னும் இல்லை. பாதிரியாரை கைது பண்ணதால திமுகக்கு வாக்கு அளிக்காம இவனுக்கு போட்டாங்க.. சும்மா லேசா trailer.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
14-அக்-202118:01:43 IST Report Abuse
DVRR விஜய் மக்கள் இயக்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்பா மகன் சண்டை வழியில் வந்ததே அந்த இயக்கம் இது இல்லை இது வேறு கிறித்துவ விஜய் மக்கள் இயக்கமா???கிறித்துவ விஜய் மக்கள் இயக்கம் என்றால் பரவாயில்லை கிறித்துவர்களின் பிச்சையினால் தானே மடியில் அரசு ஆட்சிக்கு வந்தது???
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
14-அக்-202114:36:08 IST Report Abuse
Muthuraj Richard அடுத்த ரஜினிகாந்த்......நாடும் இளைஞர்களும் உருப்பட்ட மாதிரி தான்.......படம் ஓட்ட இவர்கள் கையெடுக்கும் யுக்திக்கு பலிக்கடாவான பழைய ரசிகர்கள் இன்றும் குமுறுகிறார்கள்... நடிகனுக்கு ஜே போடும் நிலை மாறி, நல்ல கல்வி தகுதி, அரசியல் அறிவு மற்றும் தேர்ந்த அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முன்வரும் வரை நம் மாநில அரசியல் ஆரோகியமாக இருக்காது. வாழ்க தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X