ரயிலில் டிக்கெட் இன்றி பயணம்; ரூ.35 கோடி அபராதம் வசூல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம்; ரூ.35 கோடி அபராதம் வசூல்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை: ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தோரிடம், 35.47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், இந்தாண்டு ஏப்ரல் முதல் நேற்று வரை, ரயில்களிலும், நிலையங்களிலும், 400க்கும் மேலான இடங்களில், திடீர் சோதனை நடத்தப்பட்டன. அப்போது, டிக்கெட் இன்றியும், வகுப்பு மாறியும் பயணம் செய்தவர்கள், அனுமதியின்றி வியாபாரம் செய்தவர்கள் என, 7.12 லட்சம் பேர்
Train, Without Ticket, Fine, Passenger, Southern Railway, ரயில், டிக்கெட், அபராதம், ரயில்வே

சென்னை: ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தோரிடம், 35.47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில், இந்தாண்டு ஏப்ரல் முதல் நேற்று வரை, ரயில்களிலும், நிலையங்களிலும், 400க்கும் மேலான இடங்களில், திடீர் சோதனை நடத்தப்பட்டன. அப்போது, டிக்கெட் இன்றியும், வகுப்பு மாறியும் பயணம் செய்தவர்கள், அனுமதியின்றி வியாபாரம் செய்தவர்கள் என, 7.12 லட்சம் பேர் சிக்கினர்.அவர்களிடம் இருந்து, 35.47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.


latest tamil news


முககவசம் அணியாத, 32 ஆயிரத்து, 624 பேரிடம், 1.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், சென்னை ரயில்வே கோட்டத்தில், 12.78 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ரயில்களில், முன்பதிவு செய்யாமல் பார்சல்கள் கொண்டு சென்றவர்கள் பிடிக்கப்பட்டு, 37 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X