பொது செய்தி

இந்தியா

3 மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம்: பஞ்சாப் எதிர்ப்பு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லை மாநிலமான பஞ்சாப், இந்தியா - வங்கதேச எல்லை மாநிலங்களான மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ., தொலைவு வரை சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த தொலைவை 50 கி.மீ., ஆக
bsf, punjab, rajasthan, westbengal, homeministry, homeminister, border security office, பிஎஸ்எப், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மே.வங்கம், உள்துறை அமைச்சர்,

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லை மாநிலமான பஞ்சாப், இந்தியா - வங்கதேச எல்லை மாநிலங்களான மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ., தொலைவு வரை சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த தொலைவை 50 கி.மீ., ஆக நீட்டிக்கும் வகையில் புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, சர்வதேச எல்லைகளில் இருந்து 50 கி.மீ., தொலைவிற்கு பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில், சிஆர்பிசி, பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் படி, மாநில போலீசார் செயல்படுவது போல், சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
குஜராத்தில், சர்வதேச எல்லையில் இருந்து 80 கி.மீ., தொலைவிற்கு பி.எஸ்.எப்., வீரர்கள் சோதனை செய்ய முடியும் என்ற நிலையில், அது 50 கி.மீ., ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில், இது 50 கி.மீ., தொலைவிற்கு சோதனை செய்யும் அதிகாரம் உள்ளது. மேகாலயா, நாகலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசத்தில் பிஎஸ்எப் வீரர்கள் நடவடிக்கைகளுக்கு எல்லை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.


காத்திருக்க வேண்டியதில்லை


இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக முக்கியமானது. எல்லைகளை பாதுகாப்பதும், ஊடுருவலை தடுப்பதுமே பிஎஸ்எப்.,பின் பணி. ஆனால், சமீபத்திய நடவடிக்கைகள், குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்களால் பணிகளை செய்ய முடியவில்லை என்பதை காட்டுகிறது. டுரோன்களை தேடும் போதும், பறிமுதல் செய்யும் போதும் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாருடன் மோதல் முரண்பாடு ஏற்படுகிறது. பி.எஸ்.எப்., வீரர்களின் பணியானது, எல்லை செக்போஸ்ட்களை சுற்றி உள்ளன. புதிய விதிகள் மூலம், உளவுத்துறை தகவல் ஏதும் முன்கூட்டியே கிடைத்தால், உள்ளூர் போலீசாரின் நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பி.எஸ்.எப்., வீரர்களே குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




எதிர்ப்பு



மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய அரசு தன்னிச்சையாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. இது கூட்டாட்சிக்கு எதிரானது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-202121:54:10 IST Report Abuse
Kasimani Baskaran எல்லையை பாதுக்காக்கும் பணியில் மாநில அரசு குறுக்கிட்டால் அதை டிஸ்மிஸ் செய்துவிட்டு அந்தக்கட்சியை தேர்தலில் போட்டியிட முடியாத அளவில் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-அக்-202120:24:22 IST Report Abuse
sankaranarayanan எல்லையில் பாதுகாப்பு அதிகரித்தால் இவர்களுக்குத்தான் நல்லது. நாட்டில் மக்கள் நிம்மதியாக உறங்கி எழுந்திருக்கலாம் உள்நாட்டில் கலவரம் இல்லாது ஆட்சியை நடத்தலாம்.இம்ரான்கான் சித்து கூட்டு கிரிக்கட்டு இனி விளையாட முடியாது. என்ற ஒரே பயம்தான். எடுத்தது எல்லாமே எதிர்ப்பா இந்த கான் கிராசு.தன்னாலும் செய்யமுடியவில்லை. மற்றவர்கள் செய்தாலும் பிடிக்கவில்லை. எல்லேரும் பேசாம இத்தாலி போங்கடா தீர்வு கிடைக்கும். உள்நாட்டில் பொருளாதாரத்தை பெருக்க வழி பாருங்கள் அந்நியனுக்கு அடிபணியாதீர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளை விக்காதீர்கள்?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-அக்-202116:17:22 IST Report Abuse
sankaseshan BSF க்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தா சன்னிக்கு ஏன் வலிக்கிறது ,பஞ்சாப் எல்லையோர மாநிலம் கூடுதல் கவனம் தேவை ,மத்தியஅரசு செய்தது சரியானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X