கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (126) | |
Advertisement
சென்னை: நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.பா.ஜ.,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில்
Police Sealed, YGMadhuvanthi, House, Court Order, Not Repaid, Loan, போலீஸ், மதுவந்தி, வீடு, சீல், அதிகாரிகள்

சென்னை: நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பா.ஜ.,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். சில மாதங்கள் கடனுக்கான தவணை கட்டிய மதுவந்தி, அதன்பின்னர் தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதி நிறுவனஅதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


latest tamil newsஆனாலும், மதுவந்தி உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனம் சார்பாக மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை எஸ்.ஐ., ரத்தினகுமார், தேவராஜ் , வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அந்த வீட்டின் சாவியை நிதி நிறுவனத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
21-அக்-202100:44:03 IST Report Abuse
Venkatakrishnan இந்தச் செய்தியை தினமலர் வெளியிடுவதுதான் பெரிய அதிசயம்... நாட்டில் மழை அதிகமாய் பெய்கிறதே என்ன காரணம் என்று யோசித்தான்.. இப்போது விளங்கிவிட்டது...
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-அக்-202108:55:43 IST Report Abuse
Matt P வீடு கையி விட்டு கடனை அடைக்க முடியாமல் போக முடியும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னாலியே தெரிந்தால் விற்று விடலாமே வந்தது லாபம் தானே. காசு வைச்சுஇருக்கும் கட்சிக்காரனை பார்த்தஆல் காரியம் முடிஞ்சிர போவுது.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-அக்-202108:51:59 IST Report Abuse
Matt P கடன் வாங்கி கட்டமுடியாமல் , வீட்டை இழப்பது நிறைய இடங்களில் நடப்பது தான். அதுக்கு அவங்களை எல்லோரும் இப்படி திட்டுறீங்க. அவங்களே மனசு கஷ்டத்தில இருப்பாக இப்படி நடந்து விட்டதே என்று. அவங்க ஐயாவாது மனசு வைச்சு வீட்டை மீட்டலாம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் குடுத்திருப்பாங்க. கலய் தொண்டு செய்தும் பள்ளிக்குட வியாபாரம் செய்பவர்களுக்கும் இப்படி ஒரு நிலைமையா? இருக்க இடம் உண்ண உணவு உடுக்க உடை ...முதல் தேவை இருக்க இடம் ...கடன் வாங்கி வீடு வாங்கினால் முதலில் வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை தனியாக வைத்து கொள்ள வேண்டும் ...நம்ம வீட்டுக்குள்ள இரண்ட நேரம் சாப்பிடாமல். உடையில்லாமல் இருந்தா யாரு கேக்க போறாங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X