நியூசி.,யின் ஆக்லாந்தில் திடீரென அதிகரித்த கோவிட் பாதிப்பு; கட்டுப்பாடுகள் விதிப்பு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆக்லாந்து: நியூசிலாந்தில் கடந்த 55 நாட்களில் திடீரென கோவிட் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்த பாதிப்புகள் அனைத்தும் அங்குள்ள ஆக்லாந்தில் பதிவானதை அடுத்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியிருந்த நிலையில், அதனை விரைவாக கட்டுப்படுத்த நியூசிலாந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பலனாக அந்நாட்டில் கோவிட்
New Zealand, Reports, Biggest Rise, COVID-19, Cases, Six Weeks, நியூசிலாந்து, ஆக்லாந்து, கோவிட், பாதிப்பு, அதிகரிப்பு, கட்டுப்பாடுகள்

ஆக்லாந்து: நியூசிலாந்தில் கடந்த 55 நாட்களில் திடீரென கோவிட் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்த பாதிப்புகள் அனைத்தும் அங்குள்ள ஆக்லாந்தில் பதிவானதை அடுத்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியிருந்த நிலையில், அதனை விரைவாக கட்டுப்படுத்த நியூசிலாந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பலனாக அந்நாட்டில் கோவிட் பாதிப்புகள் வேகமாக குறைந்தது. அதன்பின்னர், முழுமையாக தொற்று பரவலை கட்டுப்படுத்தியதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்ததது. இதனிடையே, டெல்டா வகை கோவிட் வைரசால் மீண்டும் அந்நாடு முழுவதும் வேகமாக பரவியது.


latest tamil news


நியூசிலாந்தில் கடந்த 55 நாட்களில் 71 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் அனைத்துமே அங்குள்ள ஆக்லாந்து நகரத்தில் மட்டும் பதிவானதாகும். அந்நாட்டில் இதுவரை 4,831 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்றாலும், அங்கு குறிப்பிட்ட காலத்தில் பதிவான அதிகபட்ச பதிவாக பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பொது சுகாதார இயக்குனர் கரோலின் மெக்லனே உத்தரவிட்டார். மேலும், ஆக்லாந்தில் உள்ள 17 லட்சம் மக்களை கட்டாயம் வீட்டிலேயே இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் தற்போது வரை தகுதியுள்ள 59 சதவீதம் பேருக்கு (24.9 லட்சம் பேருக்கு) செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியபிறகே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202111:27:37 IST Report Abuse
அப்புசாமி இன்னிய தினமலர் பேப்பரில் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாயிடுச்சுன்னு போட்டிருக்காங்க. அதையும் படிச்சுட்டு கருத்துப் போடுங்க சாமிகளா...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
14-அக்-202115:13:48 IST Report Abuse
Kumar நாங்க 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்போகிறோம்,ஆனால் இவர்கள் 50 லட்சம் பேர்களுக்கு கூட போட முடியவில்லை.அதான் இந்தியா .எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் ஒன்றாக சமாளிப்போம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-அக்-202117:39:29 IST Report Abuse
Sanny அது என்னான்னா, அங்கே தடுப்பு ஊசியை போட்டுக்கொள்ள சிலருக்கு இஷ்டமில்லை. எனது உடல் எனக்கே சொந்தம், இஷ்டம்னா போட்டுக்கொள்வேன், இல்லாட்டி இலவே இல்லை, அடுத்து சிலர் அரசாங்கம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு வித்தித்து மக்களுக்கு தேவைக்கு அதிகமாக வேலை செய்யமாலே பணம் கொடுக்குது, அந்த கொழுப்பில் தடுப்பு ஊசி போட்ட விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவிலும் அப்படிதான் இருந்தாங்க, தடுப்பு ஊசி போடாவிட்டால் வேலைக்கு போகமுடியாது, ஷாப்பிங் போகமுடியாது, விளையாட்டு பார்க்க ஸ்டேடியம் போகமுடியாது, சினிமா போகமுடியாது, விமானப்பயம் வேற no என்று கட்டுப்பாடுகள் வந்துவிட்டது, இப்போ விழுந்தடித்து ஊசி போடுறாங்க, இந்தியாவில் தான் உழைத்தால் தான் தனக்கு உதவியென்பதுபோல இருப்பதால் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமைகொடுத்து தடுப்பு ஊசிபோடுடறாங்க....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-அக்-202114:25:36 IST Report Abuse
elakkumanan மோடியை குறை கூறி வெளி நாட்டுக்கு வாலாட்டும் பெயரில்லா அன்பு உள்ளங்களும் திருட்டு கட்சியின் பிரியாணி அண்டாக்களும் மேற்படி செய்தியை படித்து பார்க்கவும்... முடிஞ்சா புரிந்துகொள்ளவும்.. ரொம்ப கஷ்டம்தான் புரிந்துகொள்வது... ஏனெனில் , அதுக்கு மூளை வேண்டும்..........அதுவும் சோமபான அடிமையாகாத மூளை வேண்டும்... நம்ம ஊரில் தொன்னூறு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கு.இங்கே இருந்து கஷ்டப்படவேண்டாம்னா, ஏரோபிளான் டயரை பிடிச்சு தொங்கிகிட்டே போயி சொர்க்கத்தை காணலாம்......அங்கே உலகின் மிக சிறந்த ஜனநாயக ஆட்சி நடக்குது...............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X