அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறை சொல்லும் நிலை உருவாக கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: ''மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாக கூடாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த ஆட்சியில் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வெற்றியை குவித்துள்ளது. கடந்த 5 மாதம்
DMK, Stalin, TamilnaduCM, திமுக,ஸ்டாலின்

சென்னை: ''மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாக கூடாது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த ஆட்சியில் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வெற்றியை குவித்துள்ளது. கடந்த 5 மாதம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான் இந்த வெற்றி. மக்கள் பணியில் ஈடுபடும் போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

தி.மு.க., சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உங்களுக்கு கிடைத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றுங்கள். பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்க வேண்டும்.


latest tamil news


மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாக கூடாது. ஜனநாயகத்தில் மக்கள் தான் நமக்கு எஜமானார்கள். நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும் எப்போதும் நெஞ்சில் கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-அக்-202106:10:21 IST Report Abuse
Natarajan Ramanathan அப்படி யாரேனும் புகார் சொன்னால்தான் பின்னாடியேஆட்டோ அனுப்பிவிடுவீர்களே
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
15-அக்-202104:03:51 IST Report Abuse
S. Bharani ஆட்சியில் இருக்கும் வரை கட்சிக்காரர்கள் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
14-அக்-202122:58:39 IST Report Abuse
இந்தியன் ஆடு நனையுதே அப்டின்னு....ஓ.நாய் அழுத கதை தான்... ஞாபகத்தில் வருது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X