சிறுவாணி அணையில் மதகு திறப்பு தண்ணீரை வெளியேற்றும் கேரளா

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை : பாதுகாப்பு காரணங்களை கூறி சிறுவாணி அணையில், மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், நீர்ப்பிடிப்பு பகுதியில் சில நாட்களாக கனமழை பதிவாகி வருகிறது. அதன் காரணமாக, கோவை நொய்யல் ஆற்றில் நீர் வரத்து காணப்படுகிறது.சிறுவாணி அணை, கேரள வனப்பகுதிக்குள் இருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறையே

கோவை : பாதுகாப்பு காரணங்களை கூறி சிறுவாணி அணையில், மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், நீர்ப்பிடிப்பு பகுதியில் சில நாட்களாக கனமழை பதிவாகி வருகிறது. அதன் காரணமாக, கோவை நொய்யல் ஆற்றில் நீர் வரத்து காணப்படுகிறது.சிறுவாணி அணை, கேரள வனப்பகுதிக்குள் இருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறையே பராமரிக்கிறது. மதகு பகுதியில் நீர் கசிவு காணப்படுவதால், பாதுகாப்பு காரணங்களை கூறி, கடந்த சில ஆண்டுகளாக, அணையின் மொத்த கொள்ளளவான, 50 அடியில், 5 அடியை குறைத்து, 45 அடிக்கே நீர் தேக்கப்படுகிறது.

அணை பகுதியில் நேற்று முன்தினம், 120 மி.மீ., நேற்று, 18 மி.மீ., பதிவாகியது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்து நீர் வரத்து காணப்படுவதால், 44 அடியாக நீர் மட்டம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

வழக்கமாக, விலங்குகள் தாகம் தணிக்க, 5 செ.மீ., மதகு திறந்து வைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படும். தொடர் மழை மற்றும் அருவிகளில் நீர் வரத்து காரணமாக, 40 செ.மீ., உயரத்துக்கு நேற்று மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X