தூர்வாரப்படாத குளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூர்வாரப்படாத குளம்

Added : அக் 14, 2021
Share
கிருஷ்ணகிரி: சூளகிரி, முஸ்லிம் தெருவிலுள்ள குளத்தை உடனடியாக தூர்வார, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்கிறது. ஆனால், சூளகிரி சுற்றுவட்டார பகுதி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, முஸ்லிம் தெரு குளத்திற்கு வரும் நீர்வரத்து தடைபட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக

கிருஷ்ணகிரி: சூளகிரி, முஸ்லிம் தெருவிலுள்ள குளத்தை உடனடியாக தூர்வார, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்கிறது. ஆனால், சூளகிரி சுற்றுவட்டார பகுதி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, முஸ்லிம் தெரு குளத்திற்கு வரும் நீர்வரத்து தடைபட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள குளத்தில் குப்பை தேங்கியுள்ளது. கடந்தாண்டு குளத்தை தூர்வார டெண்டர் விடப்பட்டு பெயரளவுக்கு ஒரே நாளில் பணியை முடித்துச்சென்றனர். அரசு அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்ளவில்லை. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X