பொது செய்தி

தமிழ்நாடு

ஓலா நிறுவனத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலுள்ள ஓலா மின்சார டூவீலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நடந்த ஆள் சேர்ப்பு முகாமில், குறைவானவர்களிடமே பயோடேட்டா பெற்றதால், இளைஞர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஓலா இருசக்கர மின்சார வாகனம் தயாரிப்பு நிறுவனத்திற்கு, போச்சம்பள்ளி அடுத்த பீராஜனூரில், 13ல் ஆள் சேர்ப்பு முகாம் நடப்பதாக

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலுள்ள ஓலா மின்சார டூவீலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நடந்த ஆள் சேர்ப்பு முகாமில், குறைவானவர்களிடமே பயோடேட்டா பெற்றதால், இளைஞர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஓலா இருசக்கர மின்சார வாகனம் தயாரிப்பு நிறுவனத்திற்கு, போச்சம்பள்ளி அடுத்த பீராஜனூரில், 13ல் ஆள் சேர்ப்பு முகாம் நடப்பதாக 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் வெளியானது. அதன்படி நேற்று காலை, 7:00 மணிக்கு போச்சம்பள்ளி அடுத்த பீராஜனூரிலுள்ள சமுதாய கூடத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். ஓலா நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த வந்த நிறுவனத்தினர், 200க்கும் குறைவான பேரிடம் பயோடேட்டா பெற்றுக்கொண்டு, ஆள் சேர்ப்பு முகாம் முடிந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆள் சேர்ப்பு முகாம் நடத்திய தனியார் நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு, 'பீராஜனூர் கிராமத்துக்கு மட்டும் ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது. 'வாட்ஸ்ஆப்'பில் தவறுதலாக வெளியான தகவலை வைத்து, அதிகளவு கூட்டம் கூடி விட்டது. கூடிய விரைவில் முறையான அறிவிப்புக்கு பின், ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X