பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இன்று (அக்.,14) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், நாளை விஜயதசமியும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில், வாழை மரம், சாம்பல் பூசணி, பொரி, பழங்கள், வண்ணத்தோரணங்கள் மற்றும் பூக்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். வாழை மரம் ஒரு ஜோடி, 10 முதல், 400

கிருஷ்ணகிரி: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இன்று (அக்.,14) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், நாளை விஜயதசமியும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில், வாழை மரம், சாம்பல் பூசணி, பொரி, பழங்கள், வண்ணத்தோரணங்கள் மற்றும் பூக்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். வாழை மரம் ஒரு ஜோடி, 10 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழை பெய்து சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்ற சாம்பல் பூசணி தற்போது, 10 முதல், 15 ரூபாய் என பாதியாக விலை குறைந்துள்ளது. சாம்பல் பூசணி கிருஷ்ணகிரியில் மட்டும், 50 டன் அளவுக்கு விற்பனைக்கு குவித்துள்ளனர். நேற்று காலை சாமந்திப்பூக்கள் ஒருமார், 150 ரூபாயும், மதியம், 80 ரூபாயும் விற்கப்பட்டது. இன்று ஒருமார், 100 முதல், 150 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை முதல், அனைத்து பொருட்களும் விற்பனைக்கு குவித்துள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.


பூ விலை விர்...: ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு, ஓசூர் சந்தைக்கு பூ வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளது. விலை பலமடங்கு உயர்ந்துள்ளதால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ, 200 முதல் 500 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ நேற்று, 1,200 ரூபாய் என விற்றது. கனகாம்பரம், 1,600, சாமந்தி, 250, ரோஜா, 300 ரூபாய் என விற்றது.


* அரூரில், நேற்று மதியம் முதல், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், நான்குரோடு, சந்தைமேடு என, நகரின் முக்கிய இடங்களில், பொரி, பூ மாலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை களைகட்டியது. சாமந்தி பூ கிலோ, 100 ரூபாய், வெள்ளை பூசணி எடையளவு அடிப்படையில், 20 முதல், 80 ரூபாய், வாழைக்கன்று ஜோடி, 20 முதல், 30 ரூபாய் என விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X