பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோபி: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும், பலத்த மழையால், வரத்தாகும் உபரிநீர் நேற்று முன்தினம் முதல், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு, பவானி ஆற்றில், வினாடிக்கு, 7,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தடுப்பணையில்

கோபி: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும், பலத்த மழையால், வரத்தாகும் உபரிநீர் நேற்று முன்தினம் முதல், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு, பவானி ஆற்றில், வினாடிக்கு, 7,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தடுப்பணையில் இருந்து, மெகா அருவியாக பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர், மேடான அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த்துறையினர், தண்டோரா(டம்டம்) அடித்து உஷார்படுத்தினர். இதையடுத்து, பெரியகொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி, அடசப்பாளையம் பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X