பொது செய்தி

தமிழ்நாடு

மல்லி கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை

Added : அக் 14, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலத்தில், மல்லிகை பூ கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலத்தில், மல்லிகை பூ கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக, பூக்களின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ, 750 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ, 280 ரூபாய், செவ்வந்தி, 250 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கோழிக்கொண்டை கிலோ, 80 ரூபாய், ஒரு கட்டு ரோஸ், 160 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்கள்ன் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X