தமிழ்நாடு

அ.தி.மு.க.,விடம் பறிபோகும் பெருந்துறை; தி.மு.க., வசமாகும் ஈரோடு பஞ்., யூனியன்

Added : அக் 14, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு யூனியன், தி.மு.க., வசமாவதுடன், அ.தி.மு.க., வசம் உள்ள பெருந்துறை யூனியன், தி.மு.க.,வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ஈரோடு யூனியனில், 6 வார்டு கவுன்சிலரில், கடந்த, 2019 தேர்தலின்போது தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வசம் தலா, 3 கவுன்சிலர்கள் இருந்தனர். தலைவர், துணை தலைவர் பதவியை தேர்வு செய்வதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பால், 3 கூட்டம் தீர்வின்றி முடிந்தது. இந்நிலையில்

ஈரோடு: ஈரோடு யூனியன், தி.மு.க., வசமாவதுடன், அ.தி.மு.க., வசம் உள்ள பெருந்துறை யூனியன், தி.மு.க.,வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஈரோடு யூனியனில், 6 வார்டு கவுன்சிலரில், கடந்த, 2019 தேர்தலின்போது தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வசம் தலா, 3 கவுன்சிலர்கள் இருந்தனர். தலைவர், துணை தலைவர் பதவியை தேர்வு செய்வதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பால், 3 கூட்டம் தீர்வின்றி முடிந்தது. இந்நிலையில் 4வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் இறந்ததால், கடந்த, 9ல் நடந்த தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த விவேகானந்தன் வென்றார். தற்போது தி.மு.க., - 4, அ.தி.மு.க., - 2 என்ற நிலை வந்ததால், தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றுகிறது. அதேநேரம், பெருந்துறை யூனியனில் மொத்தம், 12 கவுன்சிலர்கள். 2019 தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர் - 9, தி.மு.க., - 3 என இருந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த சாந்தி ஜெயராஜ், யூனியன் தலைவரானார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் மூன்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தி.மு.க.,வில் இணைந்ததால், அ.தி.மு.க., - தி.மு.க., பலம் தலா, 6 என மாறியது. அத்துடன், 10வது வார்டு கவுன்சிலராக இருந்த ஜெயகுமார், அப்பதவியை ராஜினாமா செய்து, பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வானார். அக்காலி இடத்தை நிரப்ப கடந்த, 9ல் நடந்த தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்குமார் வென்றார். இதனால், தி.மு.க., - 7, அ.தி.மு.க., - 5 என்றாகி உள்ளது. பெருந்துறை யூனியன் சேர்மன் பதவியை, அ.தி.மு.க.,விடம் இருந்து தி.மு.க., கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய தலைவர் மீது தி.மு.க., நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தால், எளிதில் தி.மு.க., தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X