பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்'பில் அவதூறு: தி.மு.க.,- பஞ்., தலைவர் புகார்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கரூர்: 'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்புவதாக, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், கடவூர் பஞ்., தலைவர் செல்லமுத்து, 45; தி.மு.க.,வை சேர்ந்தவர். இவர் நேற்று காலை, எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: கடவூர் பஞ்., தலைவராக கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான் தரகம்பட்டியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில்

கரூர்: 'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்புவதாக, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், கடவூர் பஞ்., தலைவர் செல்லமுத்து, 45; தி.மு.க.,வை சேர்ந்தவர். இவர் நேற்று காலை, எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு: கடவூர் பஞ்., தலைவராக கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான் தரகம்பட்டியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும், முதியோர் உதவி தொகை பெற்று தர பணம் வாங்குவதாகவும், வாட்ஸ் ஆப்பில் அவதூறு செய்திகளை, கடந்த சில நாட்களாக பரப்பி, என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு, மக்கள் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் மீது அவதூறு பரப்பும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X