பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., கட்டாயம்; மேலும் 3 ஆண்டு அவகாசம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேலம்: பல்கலை துறைகளில், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., கட்டாயம் எனும் உத்தரவை அமல்படுத்த, யு.ஜி.சி., மேலும் மூன்றாண்டு அவகாசம் அளித்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் பல்கலை துறைகளில், முதுகலை படிப்புடன், 'நெட், செட்' தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பி.ஹெச்டி., முடித்தவர்கள், உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, உதவி

சேலம்: பல்கலை துறைகளில், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., கட்டாயம் எனும் உத்தரவை அமல்படுத்த, யு.ஜி.சி., மேலும் மூன்றாண்டு அவகாசம் அளித்துள்ளது.


மத்திய, மாநில அரசுகளின் பல்கலை துறைகளில், முதுகலை படிப்புடன், 'நெட், செட்' தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பி.ஹெச்டி., முடித்தவர்கள், உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, உதவி பேராசிரியர் நியமனத்துக்கு, பி.ஹெச்டி., கட்டாயம் எனும் உத்தரவை, 2021 ஜூலை, 1 முதல் அமல்படுத்த, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து, பல்கலை மானியக்குழு செயலர் ரஜ்னீஷ் ஜெயின், பல்கலை துணைவேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், '2018ல் வெளியிட்ட உத்தரவில், 2021 ஜூலை 1 முதல், பல்கலை உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., தகுதி கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனாவால் மூன்று ஆண்டு அவகாசம் அளித்து, 2023 ஜூலை, 1 முதல், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு பி.ஹெச்டி., தகுதி கட்டாயம் என்பதை அமல்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X