பொது செய்தி

தமிழ்நாடு

10 மாதங்களுக்கு மேலாக கோமாரி தடுப்பூசி போடுவது நிறுத்தம்: நோயின் பிடியில் உள்ள மாடுகளை காக்க விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில், கடந்த, 10 மாதங்களாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், மாடுகள் செத்து மடியும் நிலை உருவாகியுள்ளது. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாடுகளுக்கு மத்திய அரசின் சார்பில்

சேலம்: தமிழகத்தில், கடந்த, 10 மாதங்களாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், மாடுகள் செத்து மடியும் நிலை உருவாகியுள்ளது. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாடுகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசின் கால்நடைத்துறை மூலம் செலுத்துவது வழக்கம். மாடுகளின் கால் குழம்பு, வாய், மூக்கு பகுதியில், புண்கள் ஏற்படுத்தும் கிருமிகளை கொள்வதற்கும், மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இந்த தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தப்படுகிறது. தமிழகத்தில், கடந்த, 10 மாதங்களாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்துவதை கால்நடைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கி விட்ட நிலையில், நீர் நிலைகள் நிரம்பி வருவதோடு, மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து தண்ணீர் தேங்கி உள்ளது. இதில், மேயும் மாடுகள் கோமாரி நோயின் பிடியில் சிக்கி மடியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாடுகளை காக்க தடுப்பூசி மருந்து, 50 மி,லி., 485 ரூபாய்க்கு வெளியில் வாங்கினால், 15 மாடுகளுக்கு செலுத்தலாம். இது தவிர ஊசி போட வரும் டாக்டர்க்கு கட்டணம் கொடுக்க வேண்டும்., ஓரு மாடுக்கு, 60 ரூபாய் செலவிட வேண்டும். அதிக அளவில் மாடு வைத்து பராமரிக்கும் பண்ணையாளர்கள் எளிதாக செலவு செய்து விடலாம். ஒன்று, இரண்டு என மாடுகளை வைத்து பாரமரிக்கும், சிறு குறு விவசாயிகள் தடுப்பூசிக்காக, 700 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்க அரசு உடனடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைத்துறையின் சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த புல் வெட்டு இயந்திரம், கால்நடைத் தீவனம் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 60 லட்சம் மாடுகளுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். ஆனால், கடந்த, இரண்டு தவணையாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், பல மாவட்டங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. பருவ நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவலை அதிகரிக்கும். நோயின் பிடியில் மாடுகள் சிக்கினால் பால் உற்பத்தியிலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தி, மாடுகளின் உயிரை காப்பதோடு, விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X