பொது செய்தி

தமிழ்நாடு

குப்பனத்தம் அணை நிரம்பியது; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 14, 2021
Share
Advertisement
செங்கம்: குப்பனத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணை எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில், 60 அடி உயரத்துடன், 700 மி.கன அடி நீர் கொள்ளளவுடன், குப்பனத்தம் அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது ஜவ்வாதுமலையில் மழை பெய்து

செங்கம்: குப்பனத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணை எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில், 60 அடி உயரத்துடன், 700 மி.கன அடி நீர் கொள்ளளவுடன், குப்பனத்தம் அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது ஜவ்வாதுமலையில் மழை பெய்து வருவதால், அணையில், 55 அடி உயரத்துடன், 600 மி.கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு, 550 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அணையிலிருந்து எந்த நேரத்திலும் நீர் திறந்து விடப்படும் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் உத்தரவின்படி, செங்கம் மற்றும் செய்யாற்றின் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X