எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அதிகாரம்; திரிணாமுல் காங்., எதிர்ப்பு

Updated : அக் 14, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (26)
Advertisement
கோல்கட்டா: எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் அதிகரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்., விமர்சித்துள்ளது.அண்டை நாடுகளிலிருந்து மேற்கண்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக உட்புகும் குடிமக்களை கைதுசெய்து குறிப்பிட்ட நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்புவது எல்லைப் பாதுகாப்பு படையின் பணியாகும். இதனை அந்தந்த மாநில காவல்
எல்லை பாதுகாப்பு படை, பிஎஸ்எப், திரிணாமுல் காங்,

கோல்கட்டா: எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் அதிகரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்., விமர்சித்துள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து மேற்கண்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக உட்புகும் குடிமக்களை கைதுசெய்து குறிப்பிட்ட நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்புவது எல்லைப் பாதுகாப்பு படையின் பணியாகும். இதனை அந்தந்த மாநில காவல் துறையுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்து வந்தது. ஆனால் எல்லை மாகாணங்களில் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதன் காரணமாக சமீபத்தில் மத்திய மோடி அரசு எல்லைப் பாதுகாப்பு படைக்கு அதிக அளவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்த அதிகாரத்தின் மூலமாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் எல்லை மாகாணங்களில் மாநில காவல் துறையின் அனுமதி இல்லாமல் பிற நாடுகளிலிருந்து ஊடுருபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news
இதுகுறித்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது: மாநில அரசுகளின் உரிமை தொடர்ந்து மோடி அரசால் நசுக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்யும் முன்னர் மேற்குவங்க மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், அதனை செய்ய மோடி அரசு தவறி விட்டது.

மத்திய அரசு கட்டுபடுத்தும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கும்போது அனைத்து எல்லை மாநிலங்களில் உள்ள காவல்துறைக்கு அதிகாரம் குறைகிறது. இதன்காரணமாக எல்லையில் பல அப்பாவி குடிமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajay - Vellore,இந்தியா
15-அக்-202111:29:44 IST Report Abuse
Ajay இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே அயல்நாட்டுக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்த கட்சி வேட்பாளர் பக்கத்து நாட்டு எல்லைக்குள் ஒரு முறை சென்று வரலாம் இல்லை என்றால் தன்னுடைய குடும்பத்துடன் பக்கத்து நாட்டுக்கு குடிபெயரலாம்
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
15-அக்-202103:27:29 IST Report Abuse
Srivilliputtur S Ramesh பங்களாதேஷுக்கு ஆதரவா இந்த மம்தாவோட கட்சி செயல்படுது. எல்லாம் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக போடுற வேஷம். மோசடி வேலை ...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-அக்-202102:47:33 IST Report Abuse
மலரின் மகள் வருமுன் காப்பது மிக முக்கியம் என்பதை இன்றைய அரசு உணர்ந்திருக்கிறது. முந்தைய காலகட்டங்களில் வந்தால் வரட்டும் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும் ஒன்று வராது என்று அசட்டையாக இருந்தது போல் தெரிகிறது. ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும். முன்னது அசட்டை இப்போது முன்னெச்சரிக்கை. வங்கமும் பஞ்சாபும் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய எல்லை மாநிலங்கள். பிரிவினையின் பொது இணைந்திருந்த மக்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் நிலப்பரப்பிற்கு சென்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் மதத்தினால் பாதுகாப்பாக சிறப்பாக வாழலாம் என்று நினைத்து செல்ல உண்மை நிலவரம் மிகவும் மோசமாகி கொண்டே போக இந்தியாவிற்குள் நுழைந்துவிடுவதற்கு பல்வேறு வழிகளில் முயன்று உள்ளே நுழைந்து சட்டத்திற்கு புறம்பாக இங்கே தங்கி இந்தியா முழுதும் பரந்து வியாபித்தும் இருக்கிறார்கள். தேசத்திற்குள் வந்து அமைதி வாழ்க்கைக்கும் நமது கலாச்சாரத்திற்கும் இயைந்து வாழ்தல் ஏற்கப்படலாம். ஆனால் குண்டு வைப்பதற்கும் தீவிரவாதம் செய்வதற்க்கு பிரிவினைவாதம் செய்வதற்கும் கடத்துவதற்கு பாகிஸ்தானிய சீன கைக்கூலிகளாக அவர்களின் நலனுக்காக செயல்படுவதற்கும் எப்படி அனுமதிக்க முடியும். ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களின் சிலர் அங்கே குடியுரிமையும் இங்கே சிலர் பிறப்புரிமையும் பெற்றிருக்கலாம். இங்கு இருப்பவர்கள் இங்குள்ள கலாச்சாரம் இறையாண்மை சட்டதிட்டங்களுக்கு ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும். வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். எல்லைப்புற மாநில அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் நிறைய வெளிநாட்டு பணம் வரும் சமரசம் செய்து கொள்வதற்காகவும் நாட்டிற்கு எதிராக விலைபோவதற்கும். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். முதலில் அவர்களை கவனிக்கவேண்டும். இதில் ஆண் பெண் வயதானவர் அக்கா தங்கை வங்கத்தின் மகள் பஞ்சாபின் மகன் என்றெல்லாம் தயவு தாட்சத்ன்யம் பார்க்கக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கக்கூடாது அல்லவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X