பொது செய்தி

தமிழ்நாடு

உயர்மட்ட பாலம் கட்டுமான பணி சுறுசுறு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கரூர்: கரூர்-மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில்

கரூர்: கரூர்-மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. இதனால், அந்த பகுதிகளில் கடந்த, 15 ஆண்டுகளாக ஏற்பட்ட பல விபத்துகளில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும். விபத்து ஏற்படும் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், முதல் கட்டமாக கரூர் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு ஆகிய இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலங்கள், கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. தற்போது, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லும் அளவுக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் கரூர் நகரம் மற்றும் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X