பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் வரத்து குறைந்தது: விலை இல்லாததால் கவலை

Added : அக் 14, 2021
Share
Advertisement
கரூர்: ஆயுத பூஜையையொட்டி, கரூரில் வாழைத்தார்கள் குறைந்தளவிலேயே வந்துள்ளன. ஆனால், போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.ஆயுத பூஜை இன்றும், சரஸ்வதி பூஜை நாளையும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், கரூர் மாவட்டத்தில் மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று

கரூர்: ஆயுத பூஜையையொட்டி, கரூரில் வாழைத்தார்கள் குறைந்தளவிலேயே வந்துள்ளன. ஆனால், போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.


ஆயுத பூஜை இன்றும், சரஸ்வதி பூஜை நாளையும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், கரூர் மாவட்டத்தில் மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று வாழைத்தார்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டுக்கு வந்தன. ஆனால், வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் கிடைக்கவில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் ஆயுதபூஜை நடக்கும், மூன்று நாட்களுக்கு முன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வரும். ஆனால் வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்கள் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இதனால் ஆயுதபூஜை விழா சிறப்பாக நடக்குமா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், விவசாயிகள் வாழைத்தார்களை கூலி கொடுத்து, அதிகளவில் வெட்டவில்லை. வழக்கம் போல் கரூர் டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, புலியூர், திருமாநிலையூர், செல்லாண்டிபாளையம், ராயனூர், காந்தி கிராம், திருகாம்புலியூர், ஆண்டாங்கோவில், சுக்காலியூர், மண்மங்கலம், உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளுக்கு, ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டில் இருந்துதான் வாழைத்தார்கள் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு, கொண்டு செல்லப்படும். ஆனால் இன்று (நேற்று) வாழைத்தார்களை ஏலம் எடுக்க, அதிகளவில் சில்லரை வியாபாரிகள் வரவில்லை. இதனால், வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்க வில்லை. கடந்தாண்டு, 1,000 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தார் தற்போது, 500 முதல், 600 வரையிலும், 700 ரூபாய்க்கு விற்ற செவ்வாழை, 400 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X