சர்வீஸ் சாலையில் குப்பை அகற்ற எதிர்பார்ப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் இருந்து-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்ல திருகாம்புலியூர் பகுதியில் சர்வீஸ் சாலையில், அந்த பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் தங்கு விடுதிகளில் இருந்து சென்று குப்பை கொட்டியுள்ளனர். தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார

கரூர்: கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் இருந்து-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்ல திருகாம்புலியூர் பகுதியில் சர்வீஸ் சாலையில், அந்த பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் தங்கு விடுதிகளில் இருந்து சென்று குப்பை கொட்டியுள்ளனர். தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையில் குப்பை அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அந்த பகுதியில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால், திருகாம் புலியூர் சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X