பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஆயுதபூஜை: பூக்கள் விலை கிடுகிடு

Added : அக் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு, பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, மல்லிகை பூ கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை அடுத்து, பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, அதன் விலையும் கிடு கிடுவென உயர்ந்தது. நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் தினசரி பூ ஏல மார்க்கெட்டில், கடந்த வாரம், கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை, நேற்று,

நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு, பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, மல்லிகை பூ கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை அடுத்து, பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, அதன் விலையும் கிடு கிடுவென உயர்ந்தது. நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் தினசரி பூ ஏல மார்க்கெட்டில், கடந்த வாரம், கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை, நேற்று, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 60 ரூபாய்க்கு விற்பனை செய்த அரளி, 450 ரூபாய்; 50 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 120 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி, 260 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி கொண்டை பூ, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல், கடை, வீடுகளில், அலங்காரம் செய்யும் வண்ண காகிதங்களின் விற்பனையும், சூடுபிடித்தது. திருஷ்டி கழிப்பதற்கு நீர் பூசணியும் நகரின் பல பகுதிகளில், ஏாாளமான குவிக்கப்பட்டிருந்தது. அதன் விலை, 20 முதல், 30 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்தனர். அவற்றை, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

* ப.வேலூரில் உள்ள பூக்கள் ஏலச்சந்தையில் கடந்த வாரம் குண்டு மல்லி, கிலோ 300;இந்த வாரம், 800; முல்லை, 300 - 750; சம்பங்கி, 150 - 300; அரளி, 200 - 300; செவ்வந்தி, 100 -300; துளசி கட்டு, 20 ரூபாய், ரோஜா கிலோ, 300 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X