பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளில் மின்ஒயர் பழுது: 5 நாளாக மின்சாரமின்றி அவதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மின் ஒயர் பழுதாகி கடந்த ஐந்து நாட்களாக குடியிருப்பு மக்கள் இருளில் தவிக்கின்றனர்.நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை, ரயில்வே ஸ்டேஷன் அருகே எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது. அங்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டம், சேலம் அமலாக்க கோட்டம்- 13வது நிதி குழுமம் சார்பில், 342 குடியிருப்புகள் கட்டும் பணி

நாமக்கல்: நாமக்கல் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மின் ஒயர் பழுதாகி கடந்த ஐந்து நாட்களாக குடியிருப்பு மக்கள் இருளில் தவிக்கின்றனர்.


நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை, ரயில்வே ஸ்டேஷன் அருகே எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது. அங்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டம், சேலம் அமலாக்க கோட்டம்- 13வது நிதி குழுமம் சார்பில், 342 குடியிருப்புகள் கட்டும் பணி கட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இ-பிளாக்கில், 18 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு கடந்த, 9ஆம் தேதி நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள மின்சார ஒயரில் பழுது ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை மின் ஒயர்கள் சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு குடியிருக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இ-பிளாக்கில் மின் ஒயர்களை சீரமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள், கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் நேற்று மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X