பொது செய்தி

தமிழ்நாடு

மண் வளத்தை பாதுகாக்க வேளாண்துறை 'டிப்ஸ்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'மண் வளத்தை காக்கும் வகையில், பசுந்தாள் மற்றும் பசுந்தளையை உரமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்' என, மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மண் வளத்தைக் காத்திட, பசுந்தாள் மற்றும் பசுந்தைளையை உரமாக பயிரிட வேண்டும். பசுந்தாள் மற்றும் பசுந்தளையை உரமிட்டு வயலில் மடக்கி உழுவதன் மூலம்,

நாமக்கல்: 'மண் வளத்தை காக்கும் வகையில், பசுந்தாள் மற்றும் பசுந்தளையை உரமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்' என, மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: மண் வளத்தைக் காத்திட, பசுந்தாள் மற்றும் பசுந்தைளையை உரமாக பயிரிட வேண்டும். பசுந்தாள் மற்றும் பசுந்தளையை உரமிட்டு வயலில் மடக்கி உழுவதன் மூலம், மண்ணில் தழைச்சத்தை அதிகரிக்கலாம். ரசாயன உரங்களை தொடர்ந்து இட்டதால் மண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சீர் செய்யலாம். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மண்ணின் பொலபொலப்பு தன்மை அதிகரிக்கும். மண்ணில் நுண்ணுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாக பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உயரும். மண்ணின் நீர் பிடிப்புத்தன்மை அதிகரிக்கும். தக்கை பூண்டு தொடர்ந்து பயிரிடுவதால், மண்ணின் களர் தன்மை முற்றிலும் மாறும். தக்கை பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, சணப்பு ஆகிய குறைந்த வயதில், அதிக தழைச்சத்து தரக்கூடிய வறட்சி தாங்கும் தன்மை உடைய பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து வயலில் மடக்கு உழுவு செய்ய வேண்டும். அவற்றை வளர்க்க முடியாத நிலையில், வயல் வரப்பு மற்றும் பிற இடங்களில் தானாகவே வளர்ந்துள்ள கொளுஞ்சி, ஆவாரை, சுபாபுல், எருக்கு, வேம்பு மற்றும் புங்கன் ஆகியவற்றின் கிளைகளை வெட்டி, வயலில் இட்டு மக்கும்படி மடக்கி உழுது பசுந்தளை உரமாக பயன்படுத்தலாம். தற்போது, பெய்து வரும் பருவமழையை பயன்படுத்தி, பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து, மடக்கு உழவு செய்தும் அல்லது பசுந்தளை கிளைகளை வெட்டி, வயலில் இட்டு, நீர் கட்டி வைத்து, 10 நாட்கள் கழித்து உழவு செய்தும், மண்ணின் வளத்தை அதிகரித்து, அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X